Tuesday, July 6, 2010

காகிதக் கப்பல்


கணக்குப் பார்க்காமல்
கழியும்....

மனதின் வினாடிகள்
எங்கெங்கோ திரியும்...

ஆசையும்
எதிர்பார்ப்பும்
ஏணி போட்டு
வானம் தொட முயற்சிக்கும்...

கற்பனைகள்
கனவுகள்
காலத்தின் காலடிகளாய்
சுவடில்லாமல் பறக்கும்

நம் வாழ்வின்
வினாடிகள்
நழுவும் மீன் போல்

இமைகளின் அமைதியில்
விழிக்கும் வரை
இறந்தகாலமாய்...

நாளை வரும் வரை
நாம் எங்கிருப்போம்?

இன்றின் நிழல்
அமைதியிழந்து
எங்கு ஓடுகிறது?

வாழ்வின் பரிமாணம்...
ஒரு வாளித் தண்ணீரில்
மறுபடி மறுபடி
சுற்றும்,
நிற்கும்.
மக்கிப் போய்....
உருக்குலையும்
காகிதக் கப்பல் போல்....


:- முகில்

3 comments:

  1. please remove word verification.

    ReplyDelete
  2. நண்பர் கலாநேசன் அவர்களுக்கு

    ஊக்கத்திற்கு நன்றி. தாங்கள் கேட்டுக்கொண்டபடி வார்த்தை மதிப்பீடு அகற்றப்பட்டது. அகற்றக் கேட்டமைக்கு ஒரு முக்கிய காரணம் இருக்கும் என எண்ணுகிறேன். அறிந்துகொள்ள விழைகிறேன். சமயம் இருக்கும் போது எழுதுங்கள். நன்றி. உங்கள் குழந்தையின் பெயர் என்ன? உங்களுக்கும், வீட்டாருக்கும் எனது அன்பு வாழ்த்துக்கள்.

    முகில்

    ReplyDelete