உண்மை சொல்ல
முயன்ற தருணங்கள்....
வார்த்தைகள் வரவில்லை
பொய்கள் சொன்னேன்,
உண்மையாயின...
என் மனதினுள்
நானே கேள்வியானேன்...
நீ எப்படி பதிலானாய்?
சொல்ல விரும்பிய
உணர்வின்
தவம்....
வரமளிக்க நீ....
ஒரு வாஞ்சைப்
போராட்டம்.
நானும் ஒரு
காதல் போராளி போல்...
காதல்
என்
பிறப்புரிமை என்று
கவிதைகளாய்,
கட்டுரைகளாய்,
கடிதங்களாய்...
என் கனவில்...
விடியலின் அடிமையாய்
வாழ்வின் வலிகளில்
காந்தியானேன்.
அஹிம்சையின்
ஹிம்சையில்
என் அவதாரம்....
என்னை மறுபடி
உறங்க விடுங்கள்
என் கல்லறையில்
காதலி இல்லாத
காதலன் என்று
பெயரிடுங்கள்
தோற்றம் மறைவு
மட்டும் எழுத வேண்டாம்...
நான் வாழ்வேன்...
எப்போதும்
என் கனவில்.....
என் வேண்டுகோள் மணு
புரிகிறதா?
நல்ல முரண்தொடை! கவிதை மிக நன்று!
ReplyDeleteஉங்களின் வருகைக்கும், கருத்துக்கும், அன்பிற்கும் நன்றி நண்பரே!
ReplyDeleteமுகில்