தீயின் தனலாய்,
இதயப் பட்டறையில்
இழகிய உணர்வாய்....
ஏதேதோ வரைந்தும்
தெரியாத சித்திரமாய்
மௌனக் கடலின்
மோதிய நீரலைகளாய்...
அணாதையாய்த் தெரிந்த
ஆகாய விரிவில்
திசைகள் இல்லாத
அந்தரத் தேடலாய்
சொல்லாமல் புரியும்
சுதந்திர வார்த்தைகளாய்
நில்லாமல் ஓடும்
நீரின் சிரிப்பாய்
என்னில் இருக்கும்
என்னில் இயங்கும்
இரவும் பகலும்
எனக்காய்த் துடிக்கும்
இதயம் போலே....
என்னை இயக்கும்
என்னில் கலக்கும்
எனக் கென்றிருக்கும்
மூச்சைப் போலே
இந்த
உயிரின் ஒப்பந்தம்
உனது பந்தமா?
தெரியாத பொழுதுகளின்
துகிலுரிப்பில்
திறந்த மேனியாய்...
என்னில் வாழும்
நினைவுகளின்
யதார்த்தம்
என்னை மீறி
எல்லைகளில்லாமல்
எல்லாம் சூழும்
கற்பனை உலகம்....
உனது சுவடுகளில்
உன்னைத் தேடுகிறேன்.
சுற்றிச் சுற்றி
தொடரும் தேடலில்...
இலக்குகள் சுழன்ற போது
எனது சுவடுகளாய்....
என்னைத் தொடர்ந்தாய்!
என்னை ஸ்பரிசித்த
உனது
சுவாசத்தின் தொடர்பில்....
நான் சஞ்சரித்த
ஒரு
புண்ணிய யாத்திரையின்
சமிக்ஞையாய்
ஒருமுறை வாழக் கிடைத்த
இந்த சமயத்தை
உனக்கே சமர்ப்பணம் செய்கிறேன்!
உன்னால் உருவான
இவ்வுலகம்....
அதன் முகவரியாய்...
நீ....நான்....
ஒரு மெல்லிய சிரிப்பாய்...
வாழ்ந்துவிட்ட நிம்மதி
எனும் உணர்வு!
photo courtesy: widget.bigoo.ws
உங்கள் கவிதைகளுக்கு விளக்கம் கோனார் நோட்ஸில் இருக்குமா? :( ஒண்ணுமே புரியல.
ReplyDeleteஅன்புள்ள பவி அவர்களுக்கு
ReplyDeleteகோனார் தமிழுரையில் இடம் பெற்று பொருளறியுமளவு எழுதும் அறிவும் திறமும் பெற்றவனா நான்? இதெல்லாம் சும்மா உடான்ஸ்ங்க.... யாரோ எழுதுறாங்க, என் மனசில இருந்து....நான் ஒரு ஊடகம் மாதிறி ஏதோ பினாத்துறன்.... அட நீங்க என்னாடன்னா...அர்த்தம் அது இதுன்னு...
எனக்கே புரியாத அர்த்தத்த எப்படிங்க உங்களுக்கு புரிய வைக்கிறது?