அழகாய்,
பசுமை பூக்க
உயர்ந்திருந்த
மரத்தின் அன்பு
கேட்காமல் கொடுத்த
நிழல்.
காற்று.
அழகு....
அதன் பூக்கள்
வீழ்ந்த
அழகு நிழலில்
அமர்ந்த
என் காதுகளில்...
அது
தனக்குள் அழுத குரல்...
அழுகையின் வேதனை
என் மனம் பிழிய,
கேட்ட காரணத்திற்கு
மரமளித்த பதில்...
என் மனம்
என் கண்கள்
என் கண்ணீர்...
அறிவதால்
உன்னால்
உதவ இயலாது என்றது...
சொல்வதால்
உன் பாரம்
குறையலாமே என்றேன்.
சில மொழிகள்
சொல்வதல்ல என்றது.
அனுபவத்தின்
கேள்விகள்
தானே விடைகளாகும்
என்றது....
நான் பாரம்
வேண்டித்தான்
அழுகிறேன்..
என் பூக்கள்
காய்க்காமல்
வீழ்கின்றன
என் வாழ்க்கை
பலனடையவில்லை
என் குரல்
எனக்கே
கேட்காத போது
உன் காதுகளில்
எப்படி?
என்றது....
அனுபவம் விடையாகும்
என்று சொன்ன
தத்துவமே என்றேன்
என் மனம்
என் செவிகள்
என் உணர்வுகள்
பூக்கள் உதிர்வதால்
வருந்தாதே
புலரும் காலை
பூவாகும்
இன்னோரு நாள்
காயாகும்...
கனியாகும்.
இன்னொரு செடியாய்
இன்னொரு மரமாய்
உன் ஈகை
உலகிற்கு வரமாகும்
என் வார்ததைகள்
எதிரோலிக்க...
வானிலிருந்து
வீழ்ந்த நீர்த்துளி...
மரத்தின் மகிழ்வு
போல்
என் பயணத்திற்கு
வாழ்த்துச் சொல்ல...
கண்கள் திறந்தேன்
ஆம்...
வாழ்க்கை என்ற
கனவினில்
கண்கள் திறந்தேன்!
:) முகில்
பலமிழந்த பூக்களை
ReplyDeleteஇழந்ததில்
கண்கடையில்
கண்ணீர் தொக்கி
நிற்கும் மரம்!
யாரங்கே!!??
கண்ணீர் மரத்தின்
கால் வேர்களில்
குறுகுறுப்பூட்டுவது!
அட்டகாசமான உரையாடல் கவிதை வார்த்தைகள் அழகாக பூட்டியிருக்கிறீர்கள்...
ReplyDeleteநண்பரின் 'மரம்' கவிதை சிந்திக்க வைக்கிறது...
ReplyDeleteஅத்துடன் ஒன்று புலப்படுகிறது அது மரமும்,தாயும் ஒன்றுதான் என்பதை. இந்த இரண்டிற்கும் உலகில் ஈடு,இணை எதுவுமே இல்லை என்பதுதான்... உங்கள் கவிதை மழை தொடரட்டும்.... காய்ந்து போன இதயங்களுக்கு மழையாகட்டும்... வாழ்த்துக்கள்.