Saturday, February 13, 2010

காதல்... ஃப்ளாஷ் பேக்


காதலர் தினத்திற்கு
ஒரு கவிதை.
கங்கணம் கட்டிய உள்ளம்
காலங்கள் பல விட்டு
பின் ஓடி
காதல் நிறைந்திருக்கும்
மௌனக் கூடத்தில்
ஒரு ஃப்ளாஷ் பேக்... போல்

பார்வைகளின் சிறு ஸ்பரிசத்தில்
பறந்த பொழுதுகளின் முகவுரையில்
தவம் கிடந்த நெஞ்சினிலே
காவியங்கள் எழுதிய
காதல் உணர்வுகள்...

எனை நானே புரட்டிய போது...
எத்தனை வயது என்பது இல்லை.
காதல் ஒவ்வொரு நொடியும்
எனை விட்டதில்லை.

கேள்விகள் இல்லாத பவித்திரமாய்
கேட்டுப் பெறாத தானமாய்
காதல் செய்த யாகம்...
உள்ளமே அதில் தானம்...

அடுத்தது எதுவும் எண்ணாமல்
அறிவின் நிழலை அண்டாமல்
அவள் நிறைந்த இதயத்தில்
அன்பே பொழிந்தது பன்னீராய்....
அர்த்தங்கள் கேளாமல்
அழுத விழிகளில்
அன்பே வழிந்தது கண்ணீராய்...

உணர்வுகளில் உன்னதமாய்
ஒரு உண்மையின் தரிசனமாய்
ஒவ்வொரு இதயமும்
லயிக்கும்...
தன்னை மறக்கும் தருணம்....

காதல் தரும் சுகம்
காதல் மட்டுமே தரும்...

யோகிகள் போல்,
ஞானிகள் போல்,
எங்கோ தேடாமல்....
இதயத்தில் குடியிருந்த
பரம்பொருளாய்,
யதார்த்தமாய்
உயிரில் கலந்து
உருவம் தந்த காதல்...

காதல் கொண்ட இதயம்
கொண்டிருந்தேன்
என்ற ஒரு உணர்வே
மூடிய பக்கங்களில்
மூச்சின் முகவரிகளாய்
எஞ்சிய வாழ்வின்
எழுதாச் சரித்திரமாய்...

என் காவிய வாழ்வின்
காதல் ரேகைகளில்
கால்கள் சென்றன...
காலம் செல்கின்றது!

காதல் இல்லாத தினமில்லை
காதல் இல்லாமல் நினைவில்லை....
காதலில்லாமல் நானில்லை.



2 comments:

  1. பவித்திரமாய்- அப்டின்னா என்ன சார் அர்த்தம்? தயவு செஞ்சு சொல்லுங்க.... (மெய்யாலுமே எனக்கு தெரியலே)

    ReplyDelete
  2. அண்ணாமலையான் அவர்கள் தெரியவில்லை என்று சொன்னால் ஏதாவது விவகாரமான விசயம் தான்....சரி நண்பரே.... பவித்திரம், விரிந்து கிடக்கும் வானம், பல சூரிய சந்திரர்களைக் கொண்டது போல், எங்கோ செல்லும் முகில் மழை பொழிவது போல், காற்று மூச்சாகுவது போல், உயிரின் இழைகள் உடலை இயக்குவது போல், ஒரு உணர்வென்று வைத்துக் கொள்ளலாம். காதல் அப்படியொரு உணர்வு... இதயத்தின் ஒரு நிசப்தமான இசை! களங்கமில்லாதது

    ReplyDelete