Saturday, February 12, 2011

விழித்த போது விடியல்...

இரவு நேரம்...
வெளியே வீசிய பனிமழை...
வீட்டிற்குள் வீசிய அமைதி...
ஓடிக் கொண்டிருந்த டீவீ....
அலறித் தவித்த
தொலைபேசி...
முகம் பார்த்த உறவுகள்
முனகிய உயிர்...

என் மாலை நேரம்
ஏனோதானோ என்று...

ஒரு உலக நியதியில்
அன்றாடமானது.

எதிரே தெரிந்த
உருவங்கள்
கண்கள் பார்த்த எடைகளில்
வாழ்க்கையானது.

இங்கிருந்த இதயம்
எங்கோ நின்றிருக்க
கனவும் நிஜமும்
வெவ்வேறு பரிமாணங்களாய்

ஒவ்வொரு திசைகளில்
ஓடிய நானும்
ஒடாத நானுமாய்...

தத்துவம் மட்டுமே வாழ்க்கையல்ல!

கண்கள் திறந்தேன்.
விழித்த போது விடியல்!



3 comments:

  1. //ஒவ்வொரு திசைகளில்
    ஓடிய நானும்
    ஒடாத நானுமாய்...//

    super

    ReplyDelete
  2. அன்பு நண்பர் கலாநேசன் அவர்களுக்கு

    நன்றி. வெகு நாட்களாயிற்று உங்களின் வார்த்தைகள் கண்டு. நலமா?

    முகில்

    ReplyDelete
  3. ரொம்ப அழகான கவிதை. வாழ்த்துக்கள்.

    ReplyDelete