Sunday, June 28, 2015

எழுத்துக்கள் இல்லாத புத்தகம்




கண்கள் பார்த்த தருணங்கள்
இடையில் மிதந்த காற்று
காதல் சுமந்தது

பார்வைகளின்
மொழிகளில்
தூரம் குறைந்தது
மனப் பாரம்
நிறைந்தது

மௌனம்....
புன்னகை....
வினாடிகளில்
ஒராயிரம் வருடங்கள்
ஒன்றாய் வாழ்ந்து விட
ஒரு உற்சாகம்.
உத்வேகம்....

இளமைப் பருவத்தின் ...
அத்தியாயங்கள்
தொடங்கிய
இனிமை உணர்வுகள்

ஓரிரு பக்கங்கள்
திருப்பிய
வாழ்க்கைப் புத்தகத்தில்

அம்மி மிதித்தல்
அருந்ததி பார்த்தல்
எண்ணிய மந்திரங்கள்
புண்ணியம் என்று
போதனைகள்...


சுண்டுவிரல்
முடிச்சுகளில்
அக்னி சுற்றிய
வளைவுகளில்

காதலுக்கும்
வாழ்க்கைக்கும்
இடையே நடந்த
போரில்,

நிதர்சனம் செய்த
சமரசமாய்
காதலி காணாமல் போக
கல்யாணம் முடித்தவளோ
வேறென்று ஆக

எல்லாம் அறிந்த
இயற்கையும்
போதை கொண்டு
புரண்ட உடல்களானது

காமம் கரைத்த
காலம்

கண்ணே... செல்லமே
என்ற குவா குவாக்களாய் ....

அர்த்தங்கள் தேடி
அலைந்த
வாழ்க்கைப் பக்கங்களில்
ஞாலம் அறைந்த
தடங்களில்
எதையோ விட்டுவிட்ட
ஏக்கம்

வாழ்க்கையின்
வழிகளில்
மனதின் மூலைகளில்
காணாத எழுத்துக்களில்
எழுதாதபுத்தகமாய்....

என் காதலி
என் மனைவி
என் மக்கள்
எல்லாமே எனக்குள்


:-) முகில்
28 ஜூன் 2015


No comments:

Post a Comment