யார் சொல்லித் தந்தது
இந்தப் பயணம்...
நியதிகளின் நேர்கோட்டில்
வளையும் பாதைகள்.
வளையாத உள்ளங்களின்
கண்ணாமூச்சி விளையாட்டு...
இமைக்கும் கணம்
கலையும் கனவுகள்
நேற்றும் இன்றும்
காற்றாய்க் கரையும்!
நாளை என்னும்
தெரியா இலக்குகள்...
அறியாப் பாதையில்
அனாதைப் பயணங்கள்...
பெயர்கள் வைத்து
பேச்சில் மட்டும்....
பாவ புண்ணியப் புதினங்கள்
நெருடும் உணர்வுகளின்
நிழல்களில் உறங்கும்
ஒட்டாத உறவுகள்
ஓடும் வாழ்க்கை
பயணம் தொடங்கி
செல்லும் வேகம்
எல்லாம் ...
முதல் தொடக்கம்
முடிவு அடக்கம்
தோற்றம் மறைவு
என்று,
கல் அறைக்
கவிதையாய்
ஆத்மாவின் தேடல்....
யார் சொல்லித் தந்தது
இந்தப் பயணம்?
No comments:
Post a Comment