Sunday, May 30, 2010

அன்றாடம்....

வசந்தம்
வந்தது போல்
ஒரு உணர்வு...

உள்ளம்
கதவைத்
திறந்து வைத்திருந்தது.

உயிர்
ஊசலாடியது!

என்னை
அறியாமல்
நான்
என்னையே ரசித்தேன்.

உன்னை
யோசித்தேன்.

நொடிகளை
யாசித்தேன்.....

சில ஞாபகங்களை
இதயம் தாங்காது
என,

ஒரு
நிசப்தமான
பரிசானாய்!

நீங்காத
தூரங்களில்
நெருங்காத நிழல் போல்

என் நினைவுகளில்
பூத்த
உனக்கு

ஒரு வறண்ட பூமியின்
வானம் பார்த்த
தவமாய்,
வசந்தமானாய்....

இமை திறந்த
கணத்தில்
கண்ணீர்
விட்ட கண்களில்

காணல்....
கானல் போல்

வசந்தம்
எங்கோ மலர்ந்தது.....

அன்றாடம்
ஒரு வரம்

என் மூடிய இமைகளுக்குள்!

4 comments:

  1. ஒரு கோடி கவிதைகளில் கவி கோர்த்த வார்த்தைகளை விட கண்கள் விடும் ஒரு துளி கண்ணீரில் அர்த்தம் அதிகம் - பவி

    ReplyDelete
  2. Edhuhai monai - ennai ariyamal ennaiye rasithen, unnaiye yosithen? instead of unnai yosithen?

    Kannal kanal pol - nice comparison.
    Sila njabahangalai idayam thangadu - true.

    (sorry for the English version of Tamil)

    Nice one...

    ReplyDelete
  3. வணக்கம் பவி அவர்களே!
    கண்ணீர் சுமக்கும் அர்த்தங்கள்.. கனவுகள், நம் வாழ்க்கை! உங்கள் கருத்துக்கு நன்றி. முகில்

    ReplyDelete
  4. வணக்கம் தாமரை!

    எதுகை தேடி மோனை நாடி செல்லாத உணர்விது. எது கைதனில் எழுதிடலா மோ ணையதுவே தானாய் எனனுள் பிறந்தது. எழுதிய எழுத்து விழுந்தது. எப்படியென்பதை அறிகிலேன். உங்கள் அன்பிற்கு நன்றி.

    முகில்

    ReplyDelete