மென்மையாய் ரசித்த
உச்சகட்டங்களாய்...
உன் பெருமூச்சின்
ராகங்கள்
எனக்கு மட்டுமே
தெரிந்த
இதயத்தின் பரிபாஷை!
எல்லாம் எனதென்று
எண்ணிய பொழுதுகள்
என்னைக் கேளாமல்
கண்கள் விட்டன
கண்ணீர்த் துளிகள்....
முகம் மறைத்து
அமைதியாய் இதயம்
விசும்பிய வலிகள்
என்னை
அறிமுகம் செய்ய
முயன்ற கணங்களில்
அங்கும் இங்குமாய்
சிதறினேன்.....
என்னையறியாமல்
விழுந்த
என்
கண்ணீர் துளிகள்
உன்னை வரைந்தன....
விடியாத வானத்தில்
எழுந்த விண்மீனாய்
எனக்குள் தெரிகிறாய்...
சுவர்களில்லாமல்
உன்னை வரைந்த
சுகம்....
அழுகையில்
இவ்வளவு சுகமா?
அடிக்கடி
இதயம் வேண்டும்....
எனக்காக
இன்னும் ஒரு முறை
அழுது கொள்ள
அனுமதிப்பாயா?
//எனக்காக
ReplyDeleteஇன்னும் ஒரு முறை
அழுது கொள்ள
அனுமதிப்பாயா?//
அருமை. வாழ்த்துக்கள்
அன்பர் மதுரை சரவணன் அவர்களுக்கு,
ReplyDeleteஅவ்வப்போது அன்புடன் என் வீடு வந்து போகும் உங்கள் உள்ளத்திற்கும் உள்ளலுக்கும் நன்றி! மறுபடியும் சந்திப்போம்.
முகில்
தோழி தமிழினி அவர்களுக்கு....
ReplyDeleteதங்கள் வருகைக்கும், ஆலோசனைக்கும் மிக்க நன்றி. விரைவில் சேர்கிறேன்.
அன்புடன்
முகில்
Nice one.
ReplyDeleteAdikadi Idhayam Vendum, ennakka orumurai azhuthukolla anumathippaya!